பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய தம்பதி.. பகீர் வீடியோ.. - thoothukudi teacher attack video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியும், வகுப்பறைகளில் உள்ள பொருள்களை சேதப்படுத்தியும் சென்ற தம்பதியை கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியின் கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக குருவம்மாள் உள்ளார். இந்த கிராமத்தை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் குருவம்மாள் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவின் பெற்றோர் அவர்களது உறவினர்கள் உடன் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.