தமிழ்நாடு

tamil nadu

செல்லங்குப்பம் மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு

ETV Bharat / videos

தகர்க்கப்பட்ட தீண்டாமை.. செல்லங்குப்பம் மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு!

By

Published : Aug 2, 2023, 1:33 PM IST

திருவண்ணாமலை:கீழ்பென்னாத்தூர் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 300 பொதுப் பிரிவினரும், 200 பட்டியல் இனத்தவரும் என 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊருக்குள் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இதில் பொது பிரிவினர் மட்டும் சாமி கும்பிட்டு வந்த நிலையில், பட்டியல் இனத்தவர்கள் உள்ளே வந்து சாமி கும்பிட 50 வருடங்களுக்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தற்போது தாங்களும் இந்த கோயிலுக்குள் வருவோம் என்று பட்டியலின மக்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வந்ததால், கிராம மக்களிடம் சமரசம் பேசி இன்று முதல் (ஆகஸ்ட் 2) கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர்களும் அனுமதிக்க என காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் முடிவெடுத்தது.

இன்று வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பட்டியலின மக்களை போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க பொதுப் பிரிவினர் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் சண்டை, சச்சரவுகள், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details