7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா… எதற்கு தெரியுமா? - sasikala visit kodanadu
Published : Jan 18, 2024, 7:47 PM IST
கோயம்புத்தூர்:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா இன்று (ஜன. 18) நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேடில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவிற்கு செல்கிறார்.
ஜெயலலிதா நலமுடன் இருந்த போது, ஜெயலலிதாவும் அவரது தோழியுமான சசிகலா ஓய்வுக்காக கோடாநாடு செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பின் 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடைசியாக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் கோடநாடு பங்களாவிற்கு சென்று வந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜன. 18) சசிகலா கோடநாடு சென்றுள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கோடநாடு புறப்பட்டார். கோடநாடில் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில் அதன் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை (ஜன. 19) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொல்வதற்காக சசிகலா சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.