தமிழ்நாடு

tamil nadu

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி..ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்.

ETV Bharat / videos

ஈரோட்டில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடிவு - மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! - workers protest

By

Published : Jun 23, 2023, 5:34 PM IST

ஈரோடுமாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குப் பதிலாக தூய்மைப் பணிகளை காண்ட்ராக்ட் மூலம் தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதனைக் கண்டித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 725 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியமர்த்த வேண்டும் மாதம் தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை விடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்  தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று (ஜூன் 23) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக கைவிட போவதில்லை எனவும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; உத்தரபிரதேச இளைஞரை கைது செய்த ஹைதராபாத் போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details