தமிழ்நாடு

tamil nadu

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ETV Bharat / videos

அரசு நிர்ணயித்த கூலி உயர்வை வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! - etvbharat tamilnadu

By

Published : Mar 23, 2023, 3:14 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களது கூலி உயர்வை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பல நாட்களாகப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.648 நிர்ணயம் செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.648 சம்பளம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை ரூ.412 மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதாகவும், அதேபோல் பேரூராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.529 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.475 மட்டுமே வழங்குவதால், நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கோவை பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர். 

மேலும் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு, சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details