'சனாதனம் காக்கும் விநாயகர்' - குடந்தையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை! - latest news in tanjore
Published : Sep 14, 2023, 2:35 PM IST
கும்பகோணம்:நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ஆம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கும்பகோணத்தில் அமாவாசை தினமான இன்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தி ஏற்பாட்டில் ’சனாதனம் காக்கும் விநாயகர்’ மற்றும் ’செங்கோல் ஆட்சி விநாயகர்’ என இரு சிலைள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் நடுநாயகமாக செங்கோல் நிறுவப்பட்டது.
முன்னதாக விநாயகர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்த்து, கோ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் கஜ பூஜையும் சிறப்பாக செய்து விநாயகருக்கு விசேஷ அர்ச்சனை செய்து மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து 16 விதமான சோடஷ உபசாரங்களும் செய்யப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்று தரிசனம் செய்தார்.
விநாயக சதுர்த்தி, கிருஷ்ணருடன் தொடர்புடைய முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இது விநாயகரின் பிறந்தநாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகருக்கான இந்த உற்சவம் 10 நாட்கள் நீடிக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள அவரது பக்தர்களால் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.