குமரியில் அண்டை நாடுகளை அலறவிடும் வகையில் 'சாகர் கவாச்' ஆபரேஷன் ஒத்திகை! - சாகர் கவாச் ஆபரேஷன் ஒத்திகை
கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடற்பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கியூ பிரிவு, மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புத்துறையினரும் ஈடுபடுகின்றனர். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 68 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நவீன படகுகள் மூலம் கடலோர காவல் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST