மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
உலகப் பிரசித்தி பெற்ற கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று (நவ. 17) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மண்டல கால நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார். பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST