தமிழ்நாடு

tamil nadu

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ETV Bharat / videos

புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி! - Ramzan Celebration

By

Published : Apr 21, 2023, 11:07 PM IST

புதுக்கோட்டை:ரம்ஜான் பண்டிகை நாளை ( ஏப்.22 ) தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று ( ஏப்.21 ) ஆட்டுச் சந்தைகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் இன்று நடைபெறும் ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டி உள்ளதாகவும், சுமார் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெறுவதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக நடைபெறும் சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய் மட்டுமே விற்பனை நடைபெறும் எனவும், இன்று ஒரே நாளில் மட்டும் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த இரண்டு வாரமாக ஆடுகளின் விலை உயர்வால் கறிக்கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுக்கறியின் விலையும் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கறிக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையைத் தொடர்ந்து கோயில் திருவிழாக்களும் அடுத்தடுத்து வருவதால் இனி வரும் நாட்களில் ஆடுகளின் வளர்ப்பும் விற்பனையும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:50,000 பேர் கூட வசிக்கவில்லை: உலகின் 'தம்மாதூண்டு' நாடுகள் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details