Watch:மும்பையில் ரயிலில் இருந்து குழந்தையுடன் தவறி விழுந்த பெண்! - மான்குர்த் ரயில் நிலையம்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் மான்குர்த் ரயில் நிலையத்தில் நேற்று (நவ.1) குழந்தையுடன் தவறி விழுந்த ரயில் பயணி ஒருவரை அங்கிருந்த ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றினார். முன்னதாக, கீழே விழுந்த குழந்தையை சக பயணி ஒருவர் பத்திரமாக தாவிப் பிடித்தார். இதனால், தாயிற்கும் குழந்தைக்கும் ஏற்பட இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து குழந்தையைக் காப்பாறிய பயணிக்கும், தாயைக் காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST