தமிழ்நாடு

tamil nadu

195 கிலோ அழுகிய மீன் பறிமுதல்!

ETV Bharat / videos

195 கிலோ அழுகிய மீன் பறிமுதல் - ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி - tn news

By

Published : Jul 22, 2023, 7:15 PM IST

தருமபுரி: ஒகேனக்கலில் சுற்றுலா தலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும் அருவிகளைப் பார்த்தும் மற்றும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்வார்கள். பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று (ஜூலை 22) மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவின் பேரில் மற்றும் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா அறிவுறுத்தலின் பேரில், பென்னாகரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கந்தசாமி, ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து திடீர் ஒகேனக்கல் மீன் விற்பனைக் கூடம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மீன்கள் மீது பார்மலின் கெமிக்கல் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில் 5 கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மண்ணில் குழி தோண்டி புதைத்து அழித்தனா். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனைப்போன்று கடந்த மாதம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்ததை அடுத்து அதனை உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன மீன்களை அழித்தனர்

ABOUT THE AUTHOR

...view details