மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபாடு செய்த சாலை பணியாளர்கள்.. கோவையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்! - Roadside workers celebrates Ayudha Puja in kovai
Published : Oct 23, 2023, 4:05 PM IST
கோயம்புத்தூர்:தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் இன்று (அக்.23) வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொழில்துறையினர் என பலரும் அவர்களது தொழிற்சாலை, தொழில் செய்யும் இடங்கள், கடைகள் மற்றும் இல்லங்களில் அவர்கள் உபயோகிக்கும் பொருள்களுக்குத் திருநீறு, சந்தனம், குங்குமம், பொறி, சுண்டல் உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து கோவையிலும் அனைத்து தொழில் துறையினரும் ஆயுத பூஜையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களும் அவரவர் இல்லங்களில் வழிபாடு செய்து ஆயுத பூஜை கொண்டாட்டங்களை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
இந்நிலையில் பேருரை அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் ஆயுத பூஜைக் கொண்டாடும் வகையில், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மைல் கல்லுக்குத் தோரணம் கட்டி, வெற்றிலை பாக்கு பழம் ஆகியவற்றை வைத்து ஆயுத பூஜையைக் கொண்டாடி உள்ளனர். இந்தக் காட்சி அவ்வழி சென்ற அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:இராஜராஜ சோழனின் 1038ஆம் ஆண்டு சதயவிழா - விழாக் கோலம் பூண்டுள்ள தஞ்சை மாநகர்!