மகாராஷ்டிராவில் நடந்த வித்தியாசமான ஆட்டோ ரேஸ்! - tamil latest news
மகாராஷ்டிரா மாநிலம் ஹரிபூர் கிராமத்தில் வித்தியாசமான ஆட்டோ போட்டி நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பங்கு பெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோவை பின்னோக்கி (Reverse) ஓட்டி செல்லும் படியாக அமைந்துள்ளது. இதுபோன்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சாங்க்லி மாவட்டத்தில் ரிவர்ஸ் ஆட்டோ ஓட்டும் போட்டி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சங்கமேஷ்வர் யாத்திரையை முன்னிட்டு நடைபெற்ற இந்த ரேசினை நூற்றுக்கணக்கான மக்கள், ஆராவாரத்துடன் நின்று வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலர் ஆபத்தானது என்று சிலரும், இதனை ஆதிரித்து சிலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.