தமிழ்நாடு

tamil nadu

Rahul Gandhi

ETV Bharat / videos

Rahul Gandhi: ராகுல் காந்திக்கு கிடைத்த நல் தீர்ப்பும்... வயநாடு தொகுதி மக்களின் மனமும்! - National News

By

Published : Aug 4, 2023, 9:38 PM IST

வயநாடு (கேரளா): தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய இருபது நாடாளுமன்றத் தொகுதிகளில் வயநாடு மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். 2019ஆம் ஆண்டு வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தேர்ந்தேடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கில் 23 மார்ச் 2023 அன்று சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனால், வயநாடு தொகுதியின் எம்.பி. யான ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இத்தகைய சூழ்நிலையில், இன்று (ஆகஸ்ட் 04) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் தகுதி நீக்க உத்தரவுக்கும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கேரளா வயநாடு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 இது குறித்து வயநாடு மக்கள் கூறுகையில், "அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த நாள் ஒரு இனிய நாள். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் அனைத்து மோசமான சதியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தகர்ந்துவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தீர்ப்பு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கேரளா மற்றும் இந்தியா முழுவதும் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும்" எனத் தெரிவித்தனர்.

மேலும் சிலர், "வயநாட்டின் மக்கள் ராகுல் காந்திக்காக பிரார்த்தனை செய்தனர். ராகுல் காந்தி, இந்த ஜனநாயகத்தின் இளவரசர். உச்ச நீதிமன்றத்தினுடைய இந்த தீர்ப்பின் மூலம் பிரதமர் மோடிக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது. ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. மேலும், நீதிமன்றங்களும் சாமானியர்களுடன் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details