Video: நாய் குட்டிகளின் நடுவே படமெடுத்து ஆடிய பாம்பு! - பாம்பு வீடியோ
கடலூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை என்பவர் வீட்டில் வளர்த்த நாய் மூன்று குட்டிகள் ஈன்றுள்ளது. குட்டிகளின் தாய் உணவு தேடி வெளியே சென்ற நிலையில் நேற்று (டிச.11) நாகம் ஒன்று குட்டிகள் இருந்த பகுதிக்கு சென்று அவற்றின் அருகில் படமெடுத்து ஆடியது. இதைக் கண்ட தாய் நாயானது, குட்டிகளிடம் செல்ல முடியாமல் பரிதவித்து நின்றது. பின்னர் அங்கு வந்த பாம்பு பிடி வீரர் செல்லா என்பவர் அந்த பாம்பை சாதுரியமாக பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST