தமிழ்நாடு

tamil nadu

தேனியில் நடைபெற்ற மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி

ETV Bharat / videos

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்! - religious harmony

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 6:50 PM IST

தேனி:பெரியகுளம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அடுத்த வடகரை பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா சத்திரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 8 அடி உயர வலம்புரி சங்கு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும் மத நல்லிணக்க அடிப்படையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து, விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பி பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் பங்கேற்ற இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தப்பட்டது. 

மேலும் அங்கு பூஜைகள் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல், சுண்டல், புளியோதரை பிரசாத உணவுகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விமரிசையாக கொண்டாப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சில பகுதிகளில் நடைபெறும் மத நல்லிணக்க விநாயகர் சதூர்த்தி விழா மக்கள் மத்தியில் வரவேறப்பை பெற்று வருகிறது.  

ABOUT THE AUTHOR

...view details