தூத்துக்குடியில் தொடரும் இருசக்கர வாகனத் திருட்டு - அச்சத்தில் பொதுமக்கள்! - Thoothukudi district Crime news
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவர், அப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (மே 14) இரவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவு 1 மணி அளவில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்த சிசிடிவி கட்சியானது தற்போது வெளியாகி உள்ளது.
அதேபோல், அந்தப் பகுதியில் மற்றொரு வாகனமும் திருடுபோயுள்ளது. ஒரேநாளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு இருசக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை காவல் துறையினர் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெறுவதால், இரவு நேர காவலர்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:இலங்கைத் தமிழர் வெட்டிக்கொலை: மர்ம நபர்களைத் தேடும் போலீசார்!