தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ்

ETV Bharat / videos

ரேக்ளா ரேஸின் போது அறுந்த பூட்டான் கயிறு.. மாடுகளுடன் ஓடி வென்ற வீரர்! - kaanum pongal

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 7:45 PM IST

மயிலாடுதுறை:  தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் குதிரை மற்றும் மாடுகளுக்கான ரேக்ளா ரேஸ் நடைபெறுவது வழக்கம். இதனிடையே 44ஆம் ஆண்டாக இந்த ஆண்டு இன்று நடைபெற்ற போட்டிகளைப் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்துத் துவங்கி வைத்தார். மேலும் சின்ன மாடு, பெரிய மாடு, நடு மாடு என மூன்று சுற்றுகளாக மாட்டுவண்டிகளுக்கான போட்டிகள் முதலில் நடைபெற்றது. ஐந்து கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் வரை நடைபெற்ற இந்த போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்வமுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் போட்டியின் போது 7 நம்பர் எண் கொண்ட கோபாலகிருஷணன் என்பவர் ஓட்டிச் சென்ற வண்டியினை விட்டு மாடுகள் மட்டும் தனியாகப் பிரித்துச் சென்றது. மாடு வண்டியுடன் பூட்டி இருந்த பூட்டான் கயிறு அருந்த நிலையில் மாடுகளைத் தனியாக ஓட விடாமல் இழுத்துப் பிடித்தவாறு இரண்டு கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டியில் இருந்து கீழே இறங்கி ஓடி மூன்றாம் பரிசை வீரர் வென்றார். மேலும் மாட்டுடன் ஓடிச் சென்று வீரர் வெற்றி பெற்றது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

ABOUT THE AUTHOR

...view details