தர்மபுரியில் மாபெரும் வாசிப்பு திருவிழா! - தர்மபுரியில் மாபெரும் வாசிப்பு திருவிழா
தர்மபுரி: 'கைபேசியை விடு புத்தகத்தை எடு' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தர்மபுரி வாசிக்கிறது என்னும் திருவிழா நடைபெற்றது. அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். பின்னர் அவர், தகடூர் புத்தகபேரவை சார்பில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக எழுத்தாளர் யெஸ். பாலபாரதி எழுதிய 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற புத்தகம் வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST