தமிழ்நாடு

tamil nadu

இட ஒதுக்கீடு பற்றி அவதூறு கருத்து கூறிய ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ETV Bharat / videos

இடஒதுக்கீடு பற்றி ரங்கராஜன் நரசிம்மன் அவதூறு கருத்து - நடவடிக்கை எடுக்க தந்தை பெரியார் திக கோரிக்கை - comments about reservation

By

Published : Mar 28, 2023, 7:44 PM IST

சென்னை: இட ஒதுக்கீடு குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்துப் பதிவிட்ட நபரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'நமது கோவில்; நமது உரிமை; நமது கடமை' என்றப் பெயரில் இணையதளத்தை உருவாக்கி கோயில்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளையும் நடத்தி வருபவர், ரங்கராஜன் நரசிம்மன். அவர் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் இட ஒதுக்கீடு குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது.

சென்னை மாவட்ட செயலாளர் குமரன் இந்தப் புகாரை அளித்துள்ளார். குறிப்பாக பல ஆண்டு காலம் போராடி பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டின் மூலம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அவர்களை இழிவுபடுத்தும் வகையில் ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் ரங்கராஜன் நரசிம்மன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:முன்னாள் விளையாட்டு வீரரா? பென்ஷனுக்கு விண்ணப்பிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details