மும்பையில் சாமி தரிசனம் செய்த ராம்சரண்! - மும்பையில் ராம் சரண்
Published : Oct 4, 2023, 12:54 PM IST
சென்னை:தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், மகதீரா படம் மூலம் அறிமுகமாகி இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலகளவில் அனைவரது கவனத்தையும் பெற்ற இவர், இன்று (அக் 3) மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் யுவசேனாவின் கட்சித் தலைவர் ராகுல் நரேன் கனலுன் தரிசனம் செய்தனர்.
இதனை ராகுல் நரேன் தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ராம்சரண் கோயிலுக்கு வரும் செய்தி அறிந்து ராம்சரணின் ரசிகர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரான்சரண்-உபாசனா தம்பதியருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த ஜோடிக்கு பலர் வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், தனது பெண் குழந்தைக்கு க்லின் காரா கொனிடலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
தற்போது இயக்குநர் சங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.