தமிழ்நாடு

tamil nadu

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது குடும்பத்துடன் சாமி தரிசனம்

ETV Bharat / videos

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்! - Vaitheeswaran Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 9:43 PM IST

மயிலாடுதுறைமாவட்டம், சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இக்கோயிலில் அங்காரகன், செல்வ முத்துக்குமாரசுவாமி, சித்த மருத்துவ தலைவரான தன்வந்திரி மற்றும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 

இக்கோயிலில் வீற்றிருக்கும் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு ஆண்டுதோறும் தை மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு உள்ள திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது கணவர் விசாகன் மற்றும் மகனுடன் சாமி தரிசனத்திற்காக வருகை புரிந்தார்.

சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details