தமிழ்நாடு

tamil nadu

இமையமலையில் ரஜினிகாந்த்

ETV Bharat / videos

Rajinikanth: இமயமலையில் ரஜினிகாந்த் - வெளியான வைரல் வீடியோ..! - ஜெயிலர்

By

Published : Aug 16, 2023, 11:05 PM IST

சென்னை: இந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், ரஜினிகாந்த். இவருக்கும், இமயமலைக்கும் இடையே இருக்கும் தொடர்பு எளிதில் புரிந்துவிடக் கூடியது அல்ல. ரஜினியின் இமயமலை பயணம் என்றாலே அது மாநிலத்தின் தலைப்பு செய்தியாக வருவது வழக்கம். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீடு சமயத்தில் அவர் இமயமலை பயனத்தை மேற்கொண்டார்.

தன் பயணத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தான் நான்கு ஆண்டுகளுக்கு பின் செல்வதாகவும், கரோனா தொற்று காரணமாக இத்தனை நாள் போக முடியாமல் இருந்ததாகவும் கூறினார். மேலும் அங்கு சென்று யோகா, தியானம் என நாட்களை கடந்துள்ளார். ரஜினிகாந்த் இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு என செல்லும்போது அவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் இமயமலை பகுதியில் உள்ள 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு புனிதமான குகைக்கு மத குருக்கள் ரிஷிகளுடன் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் படி ஏறி நடந்து வரும்போது சில ரசிகர்கள் அவரிடம் நலமா என்று கேட்க, அவரும் நலம் என்று புன்னகைத்து பதில் கூறினார். மேலும், அங்கு இருந்த பொதுமக்கள், காவல் துறையினர் என பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details