கத்திப்பாரா சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கிய மழைநீர் - சென்னையில் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று(அக்.31) மாலை முதல் கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை மூலம் ஆலந்தூரில் இருந்து கிண்டி, அசோக் நகர் செல்ல கூடிய முக்கிய வழியாகும். தற்போது பெய்து வரும் மழையால் இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு சுரங்கப்பாதையை கடந்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST