பம்மல் பிரதான சாலையில் கடல் போல் காட்சியளிக்கும் மழை நீர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி! - heavy road
Published : Nov 30, 2023, 11:11 AM IST
சென்னை:சென்னை புறநகர் பகுதியில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலை மற்றும் முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் மழையின் காரணமாக, சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீரானது மூன்று அடி உயரம் வரை தேங்கி நிற்கிறது. கடல் அலை போல் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரை அப்புறப்படுத்த முடியாமல், மாநகராட்சி ஊழியர்களும் தவித்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையிலும் மாநகராட்சி அதிகாரிகள் தங்களது பணியைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழை வருவதற்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டிருந்தால், சாலைகளில் மழை நீர் கடல் போல் காட்சி அளித்திருக்காது என பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.