ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே பாஜக ஆட்சி செய்கிறது - ராகுல் காந்தி - தேச ஒற்றுமை யாத்திரை
'தேச ஒற்றுமை' என்ற யாத்திரையை காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கினார். பின்னர் பேசிய அவர், ''இந்திய மக்களை மோதவிட்டு பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே, ஏழை மக்களைப் பற்றி மோடி அரசு சிறிதும் கவலைப்படவில்லை. பாஜக ஏழை, எளிய மக்களின் வாழ்வைத் திருடி வருகிறது. நாட்டில் விவசாயிகள் உயிர்வாழவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது'', என பாஜக அரசை சாடியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST