Chandramukhi 2: பழனி கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்! - Actor Raghava Lawrence
Published : Sep 27, 2023, 9:51 PM IST
திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலுக்கு இன்று இரவு (செப்.27) வந்த திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில், படம் வெற்றியடைய வேண்டி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மின் இழுவை ரயில் வழியாக மலைக் கோயிலுக்குச் சென்று ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த முருகனை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் போகர் சமாதிக்குச் சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து, மின் இழுவை ரயில் வழியாக கீழே வந்த அவருடன், ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமம் சென்று அங்கு புலிப்பாணி ஜீவசமாதியை வணங்கினார்.
அங்கு சிறிது நேரம் தியானம் மேற்கொண்டு விட்டு பின்னர் புறப்பட்டார். மேலும், பழனி முருகன் கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர், அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.