''இயற்பியலில் இருந்து கேட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது'' - நீட் எழுதியவர்களின் கருத்து! - நீட் தேர்வு மையங்கள்
தருமபுரியில் நடந்த நீட் தேர்வுக்கு மாணவர்கள் சரியாக காலை சரியாக 11:30 மணிக்கு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்த மாணவர்களுக்குத் தேர்வு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டவாறு சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், நீட் தேர்வு எழுத வந்த இரண்டு மாணவர்கள் டீசர்ட் மற்றும் முக்கால் பேண்ட் அணிந்திருந்ததால் அவர்களை வேறு உடைகளை அணிவித்து வரக்கூறி அனுப்பி வைத்தனர். இத்தைய சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் நீட் தேர்வு எழுதச் சென்றனர்.
தொடர்ந்து, நீட் தேர்வு எழுதிய பிறகு தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு குறித்து கேட்டபோது, இயற்பியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாகவும் மற்றபடி அனைத்தும் சுலபமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர்.
வழக்கமாக அரசு பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவிகள் நீட் தேர்வு கடினம் என்றுதான் கடந்த ஆண்டு தெரிவித்து வந்தனர். இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் தேர்வு சுலபமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் நீட் தேர்வு எழுத டவுசருடன் வந்த மாணவர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!