தமிழ்நாடு

tamil nadu

கோவை தனியார் பேருந்தில் க்யூ.ஆர்.கோடு சிஸ்டம்! பேருந்தில் இனி சில்லறை பிரச்னை இல்லை

ETV Bharat / videos

சில்லறை பிரச்னை இனி இல்லை.. கோவை தனியார் பேருந்தில் QR சிஸ்டம்.. மக்கள் வரவேற்பு! - private buses

By

Published : Jun 6, 2023, 2:14 PM IST

கோயம்புத்தூர்:கோவையில் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் என்றாலே, எப்போதும் பொதுமக்களை ஈர்க்க பல்வேறு அலங்கார அம்சங்களை மேற்கொள்வர். பேருந்துக்கு உள்ளும், பேருந்தைச் சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகளை மாட்டிக் கொண்டு, ஸ்பீக்கர்களில் எப்போதும் பாட்டு ஒளித்தபடி, இருக்கைகள் உட்பட அனைத்து விசயங்களுக்கும் தனி கவனம் செலுத்துவது வழக்கம். 

அதே சமயம் பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கவும் வேகமாக பேருந்தை இயக்குவர். ஆனால் அரசோ அல்லது தனியார் பேருந்தோ எதுவாக இருந்தாலும், பொரும்பாலும் பேருந்தில் பயணிக்கும் போது சில்லறை பிரச்னை என்பது அதிகமாக காணப்படும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சண்டை சம்பவங்களும் அரங்கேறுவதை தினம் தோறும் காண முடிகிறது.

எனவே பேருந்தில், பொதுமக்கள் மற்றும் நடத்துநர் இடையே சில்லறை பிரச்னை அதிகமாக வருவதைத் தடுக்க, கோவை தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த க்யூஆர் கோடு (QR CODE) வசதியை பேருந்தில் அமைத்துள்ளார். இதனை ஸ்கேன் செய்து போகும் இடத்திற்கு என்ன தொகையோ அதனை செலுத்தி அனுப்பிக் கொள்ளலாம். இவ்வாறு ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பும் வசதி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தனியார் பேருந்து நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details