மானாமதுரையில் எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு ஊர்வலம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஎல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் புரட்டாசி செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு விழாவை முன்னிட்டு புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி விளக்கு அனையாமல் கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST