தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் மஞ்சுவிரட்டைப் போன்று நூதன விளையாட்டு

ETV Bharat / videos

தென்காசியில் மஞ்சுவிரட்டைப் போன்ற வித்தியாசமான விளையாட்டு.. பொதுமக்கள் உற்சாகம்! - மாட்டுப் பொங்கல் 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 2:32 PM IST

தென்காசி:மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தென்காசி அருகே மஞ்சுவிரட்டைப் போன்றதொரு வித்தியாசமான விளையாட்டு கோலாகலமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று (ஜன.16), மாட்டுப் பொங்கல் என தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்த புன்னையாபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள், தங்களின் விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளுக்கு சந்தனம், குங்குமம் போன்றவை இட்டு அலங்கரித்தனர். பின்னர் பொங்கல் வைத்து, அவற்றை தெய்வங்களுக்குப் படையலிட்டு, மாடுகளுக்கு கொடுத்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, புன்னையாபுரம் கிராமத்தில் இருக்கும் திடலுக்கு, கிராம மக்கள் அனைவரும் தங்களது மாடுகளைக் கொண்டு வந்தனர். இவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் திரட்டப்பட்டிருந்தது. பின்னர், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்ல, அவர்களை காளைகள் விரட்டிச் செல்லும், மஞ்சுவிரட்டைப் போன்ற விளையாட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டை ஊர் மக்கள் அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details