தமிழ்நாடு

tamil nadu

கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

ETV Bharat / videos

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: எவ்வளவு தெரியுமா?

By

Published : Mar 15, 2023, 12:13 PM IST

தஞ்சாவூர்:புன்னைநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. அதனால் அபிஷேகம் எதுவும் நடைபெறுவதில்லை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும்.

இந்நிலையில் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமியைத் தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதனைத் தொடர்ந்து (14.3.23) நேற்று இக்கோயிலில் உள்ள உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் கவிதா, அனிதா ஆகியோர் தலைமையில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இப்பணியில் கோயில் பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மற்றும் தன்னார்வலர்கள், மகளிர் குழுக்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

கடந்த இரண்டு மாதம் உண்டியல் வசூலில் 39 லட்சத்து 93 ஆயிரத்து 722 ரூபாய் வசூலாகி இருந்தது. மேலும் தங்கம் 892 கிராம் எடையிலும், வெள்ளி 1641 கிராம் எடையிலும் காணிக்கை இருந்தது. இந்த தொகை வங்கியில் செலுத்தப்பட்டு நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. மேலும் உண்டியல் வசூல் எண்ணும் பணிகள் கண்காணிக்கப்பட்டு கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details