தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார் கண்காட்சி

ETV Bharat / videos

புதுச்சேரி பீச் சாலையில் விண்டேஜ் கார் கண்காட்சி.. கார் பிரியர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி! - பாரம்பரிய கார்களின் கண்காட்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 4:10 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் இந்திய வரலாற்று கார்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையிலான பாரம்பரிய கார்கள் காட்சிப்படுத்தப்பட்டது. போர்டு, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார் உள்ளிட்ட உலகின் பல முன்னணி கார் நிறுவனங்களின் பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தப்பட்டன.

அதே போன்று ராயல் என்பீல்டு, எஸ்.டி. - ஜாவா உள்ளிட்ட மிகவும் பழமையான 12 மோட்டார் சைக்கிள்களும் இடம் பெற்றிருந்தன. இந்த கண்கவர் கண்காட்சியை கடற்கரைக்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் பாரம்பரிய கார்கள் முன்பு நின்று செல்பி எடுத்தும், கார் உரிமையாளர்களுடன் காரை பராமரிக்கும் விதங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details