Puducherry Happy street; புதுச்சேரியில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்! - புதுச்சேரி முக்கிய செய்திகள்
Published : Oct 22, 2023, 1:20 PM IST
புதுச்சேரி:நாள் முழுவதும் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டு வார விடுமுறை நாட்களை மகிழ்வாகக் கொண்டாடும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி, புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இசைக்கு தகுந்தவாறு உற்சாகமாக நடனமாடினார்.
இதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர். மேலும் மல்லர் கம்பம், பறை இசை, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு துவங்கி 9 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் தொடங்கிய ஹேப்பி ஸ்ட்ரீட் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், முதல் முறையாக புதுச்சேரியில் உள்ள கடற்கரைச் சாலையில் நடத்தப்பட்டது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.