தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video:சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்வு - தீவிர கண்காணிப்பில் பொதுப்பணித்துறை அலுவலர்கள்! - Tamil Nadu Public Works Officers

By

Published : Aug 8, 2022, 6:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

கோவை: வால்பாறை அருகில் உள்ள சோலையார் அணை மற்றும் பரம்பிக்குளம் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 8) வால்பாறையினை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வால்பாறையில் உள்ள அப்பர் ஆழியார், காடம்பாறை அணை, அப்பர் நீரர், லோயர் நீரர், சோலையார் அணை மற்றும் பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவினை எட்டி உள்ளது. சோலையார் அணையிலிருந்து உபரிநீர் மூன்று மதகுகள் வழியாக 4567 கனஅடி வெளியேற்றப்படுகிறது. பரப்பிக்குளம் அணையிலிருந்து 5,487 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் காவல் துறையினர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் கேரள பொதுப்பணித்துறை அலுவலர்கள் அணையின் நீர் மட்டத்தைத்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details