பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!! - நாட்றம்பள்ளி காவல்துறை
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் தனம்மாள்(60). இவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் தனம்மாள் வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க நகையை திருடி கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது தனம்மாளின் மருமகள் தர்ஷினி அருகே உள்ள கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இருவர் வீட்டில் இருந்து வெளியே வருவதை அறிந்த தர்ஷினி கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருடர்களை பிடிக்க ஓடினர். அப்போது ஒருவன் தப்பித்து ஓடிய நிலையில் மற்றொருவனை அப்பகுதியில் மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர் திருடனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட திருடன் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த திருப்பதி (22) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பியோடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் பட்டப் பகலில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:எருது விடும் விழா... சீறிப்பாய்ந்த காளைகள் - மக்கள் உற்சாகம்!