சிறுவர்கள் காணாமல் போவதன் காரணம் என்ன? - மனநல ஆலோசகர் வந்தனா கூறும் பகீர் தகவல்! - சிறுவர்கள் காணாமல் போவதன் காரணம் என்ன
தமிழ்நாட்டில் அதிகப்படியான சிறுவர்கள் பல்வேறு வகைகளில் காணாமல் போவதன் காரணம் என்ன? எதற்காக வீட்டை விட்டு சிறுவர்கள் வெளியேறுகின்றனர், என்பது குறித்து விளக்குகிறார் மனநல ஆலோசகர் வந்தனா. இது தொடர்பாக, தமிழ்நாடு ரயில்வே காவல் துறை அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களுக்கு சிறார்கள் வருகின்றனர். அவர்களை ரயில்வே அதிகாரிகள் மீட்டு குடும்பத்தாருடன் சேர்த்துள்ளனர். அதிலும், சிறுமிகளை விட சிறுவர்களே அதிகமாக வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.