தமிழ்நாடு

tamil nadu

கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ETV Bharat / videos

கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - கோவையில் திரௌபதி முர்மு

By

Published : Feb 18, 2023, 6:29 PM IST

கோவையில் பல்வேறு விழாக்களில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தடைந்தார். கோவை பூண்டி அருகே அமைந்துள்ள ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனி விமானத்தில் கோவை புறப்பட்டு வந்தார். 

இவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, டி ஜி பி சைலேந்திரபாபு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகர மேயர் கல்பனா ஆகியோர் வரவேற்றனர்.  இவர் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து சாலை மார்கமாக விருந்தினர் மாளிகை சென்றார். அங்கிருந்து  மீண்டும் சாலை மார்க்கமாக ஈசாவிற்கு புறப்பட்டுசென்றார். இவரது வருகையொட்டி 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details