பட்டறையில் அடைத்து வைத்து பணம் வழங்குவது திராவிட மாடல் அரசா? - பிரேமலதா ஆவேசம்! - சேலம்
சேலத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிகப்படியான விதிமீறல்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற தேர்தலை இதுவரை தமிழ்நாட்டில் கண்டதில்லை. திருமங்கலம், கும்மிடிப்பூண்டி ஃபார்முலாவை தாண்டி தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா பிரபலமாகி உள்ளது.
பொதுமக்களை காலையில் ஒரு பட்டறையில் அடைத்து வைத்து மாலையில் பணம் வழங்கி அனுப்பி வைக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிமுறை மீறல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க:'ஈரோட்டில் தேர்தல் விதிமீறல்கள் அப்பட்டமாக நடைபெறுகிறது' - எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு