தமிழ்நாடு

tamil nadu

video:பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பு- வியனரசு தகவல்!

ETV Bharat / videos

பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பு - தமிழர் தேசிய கொற்றம் கட்சித்தலைவர் வியனரசு! - செய்தியாளர்களை சந்தித்த வியனரசு

By

Published : Feb 14, 2023, 8:45 PM IST

நெல்லை: நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் தேசியக் கொற்றம் கட்சியின் தலைவர் வியனரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அதை வரவேற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 

குழந்தை என்றும், பாராமல் இத்தகைய ஆதரவை தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்காளர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது. குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியோர் தங்கள் ஆதரவை திரும்பப்பெற வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், 'பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்து வரும் கருத்து வரவேற்கத்தக்கது. பிரபாகரன் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழ் வழங்கவில்லை என்பதாலும்; இலங்கை நாடாளுமன்றத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதாலும், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் பெயர் நீக்கப்படவில்லை என்பதாலும் அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது’ எனத் தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details