ஆஹா இதுவல்லவா போட்டி : மனைவிகளை தூக்கி கொண்டு ஓடும் கணவன்மார்களின் வீடியோ வைரல்! - கணவன் மனைவி வீடியோ வைரல்
Published : Jan 18, 2024, 9:34 PM IST
திருநெல்வேலி: பொங்கல் பண்டிகை என்றாலே பாரம்பரியம் தான் நினைவுக்கு வரும். நம் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும், கதிரவனையும் போற்றும் தமிழர்களுக்கான திருநாள் தான் பொங்கல் பண்டிகை.
இப்படியான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த அம்மச்சிகோவில் கிராமத்தின் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கபடி போட்டி, கோலமிடுதல், முருக்கு கடித்தல், உரல் தூக்குதல், கணவர் - மனைவி நடனம் ஆடுதல் என ஏராளமான போட்டிகள் நடந்தன. குறிப்பாக திருமணம் ஆன கணவன் மனைவிக்கிடையே நடைபெற்ற போட்டியில் கணவர் மனைவியை தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூர இலக்கை அடையும் வரையில் ஓட வேண்டும் என்று போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஆர்வத்துடன் கணவன் - மனைவி பலர் ஜோடியாக பங்கேற்ற நிலையில், மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும்போது ஒருவர் மனைவியை தூக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். இந்த காட்சி அங்கு இருந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனைவிகளை தூக்கி கொண்டு ஓடும் கணவன்மார்களின் வீடியோ தற்போது சமூக வலைதளதங்களில் வைரலாகி வருகிறது.