தமிழ்நாடு

tamil nadu

ஆழியார் கவி அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

ETV Bharat / videos

ஆழியார் கவி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை - குளிக்க தடை

By

Published : Jul 26, 2023, 8:45 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதி, பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில் (முன்னதாக குரங்கு அருவி என அழைக்கப்பட்டது) காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் வறட்சியினாலும் கவியருவி மூடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சக்தி எஸ்டேட், தல நார் பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக கவி அருவியில் தண்ணீர் வந்த நிலையில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கவி அருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த வாரம் தான் வனத்துறையினர் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இவ்வருவியில் இருந்து நேரடியாக ஆழியார் அணைக்கு தண்ணீர் செல்லும் என்பது குறிப்பிடதக்கது.

ஆறு மாதங்களுக்குப் பின் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட அருவியில், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது  அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details