சசிகலாவின் எஸ்டேட் அலுவலக கண்ணாடிகளை உடைத்தது யானைகளா? வெளியான அதிர்ச்சி வீடியோ! - கோடநாடு
Published : Oct 5, 2023, 10:21 AM IST
|Updated : Oct 5, 2023, 10:42 AM IST
நீலகிரி:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு செல்லும் சாலையில் வி.கே.சசிகலாவின் கர்சன் டீ எஸ்டேட் என்றழைக்கப்படும், கிரீன் டீ எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் அலுவலக கண்ணாடிகள் கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்து கிடந்ததாக எஸ்டேட் நிர்வாகம் சார்பில் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தது யானைகளாகக் கூட இருக்கக் கூடும் என்று சந்தேகத்தின் பேரில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஏதேனும் தடயம் கிடைக்குமா என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.