கடை ஷட்டரை உடைத்து பணம், ஐபோன் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை!
சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியில் பால் விற்பனை கடை நடத்தி வருபவர் முருகன். இவர் நேற்றிரவு (மே 23) வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று (மே 24) காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தினர் முருகனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் முருகன் கடைக்கு சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த 50 ஆயிரம் பணம், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பால் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து முருகன் கிண்டி காவல் நிலையத்தில் புகாரின் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஹூடி டிசர்ட் மற்றும் முகமூடி அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கடப்பாரை மூலமாக ஷட்டரை உடைத்து, கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மூதாட்டிகளே குறி.. பாலியல் வன்கொடுமை செய்யும் சைக்கோ கொலையாளி.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?