இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்..! நடுரோட்டில் போதை ஆசாமி ரகளை - சென்னை செய்திகள்
சென்னை: புதுப்பேட்டை சாலையில் தனது காரை ஆன் செய்த நிலையில் நின்று கொண்டிருந்த காருக்குள் இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அதனைப் பார்த்த பிற வாகன ஓட்டிகள் நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் அந்த இடத்தில் கூட்டம் கூடியது. பின்னர் அங்கு வந்த போலீசார் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பும் முயற்சியில் இறங்கினர்.
போலீசார் எவ்வளவு முயன்றும் அந்த இளைஞரை எழுப்ப முடியவில்லை. இதனால் போலீசார் மொத்தமாக சேர்ந்து அந்த காரை நன்கு குலுக்கினர். அந்த குலுங்கலால் தூக்கம் கலைந்து வெளியே வந்த இளைஞரிடம், மதுபோதையில் உள்ளாரா என்பதை அறிய பிரீத் அனலைசரில் ஊதும் படி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் பிரீத் அனலைசரில் ஊத மறுத்த இளைஞர், நான் டிரிங்கன் டிரைவ் (drink and drive) கிடையாது; நான் டிரைவ் அண்ட் ட்ரிங்க் (drive and drink) என்று போலீசாரே அதிர்ச்சி அடையும் அளவிற்கு புது விளக்கம் அளித்துள்ளார். பின்னர் திடீரென்று சாலைக்கு வந்தவர், இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்! ஜாவ்..ஜாவ் என்று போக்குவரத்தை சரி செய்வது போல் பேசி உள்ளார்.
இரவு நேரத்தில் நடுரோட்டில் நின்று கொண்டு மது போதையில் இளைஞர் செய்யும் ரகளை வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் போலீசார் அந்த இளைஞர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் (obstruction) வழக்கு பதிவு செய்து நந்த இளைஞரை விசாரித்து வருகின்றனர்.