பாபர் மசூதி இடிப்பு தினம்; காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை! - காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை
Published : Dec 6, 2023, 8:55 AM IST
வேலூர்: ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளைத் தீவிரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று (டிச.6) வேலூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறை அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தின் பிரதான ரயில் நிலையமான காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் ஒன்றாக இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் உடைமைகள் போன்றவற்றில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கக் கூடிய முக்கியமான ரயில் நிலையம் என்பதால், ரயில் நிலையத்தின் நுழைவாயில், நடைமேடை, தண்டவாளங்கள் ஆகிய இடங்களில் காவல்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.