Video: காவல்துறை அலுவலர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து: இருவர் காயம்! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி பொன்மனையைச் சேர்ந்த ரேணுகா (55) தக்கலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தன் சகோதரி மகன் பத்பநாபனுடன் (34) இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சித்திரங்கோடு பகுதியில் சென்ற போது, தொற்றிக்கொடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெஸ்டின் ராஜ் ஓட்டி வந்த கார் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் நேர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரேணுகா, பத்பநாபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST