செல்போன் கடையில் சுவற்றை துளையிட்டு திருட்டு! - செல்போன் கடையில் திருட்டு
தென்காசி: புளியங்குடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான கடையில் நாகராஜன் என்பவர் மொபைல் கடை வைத்துள்ளார். அவரது கடையின் பின்புறமுள்ள சுவற்றில் துளையிட்டு வந்த திருட்டு கும்பல் கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் பணத்தை திருடியுள்ளது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST