வேலூரில் 400 'துணிவு' டிக்கெட்டுகள் திருட்டு.. காவல் நிலையத்தில் புகார்! - thunivu ticket booking
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் அஜித்குமார் ரசிகர் மன்ற மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நாளை வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட 400 டிக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அதன் விலை ரூ.16 ஆயிரம் ஆகும். நேற்று இரவு அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது சினிமாவுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அஜித் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST