திருப்பூர் பேருந்து நிலையத்தில் அத்துமீறிய காதல் ஜோடி.. போலீசார் கொடுத்த தண்டனை! - திருப்பூர் பழைய பேருந்து நிலையம்
Published : Dec 2, 2023, 11:18 AM IST
திருப்பூர்:திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமான செயல்களில் செய்து வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் முகம் சுளிக்கும் விதமாக இவர்களின் காதல் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள நடை மேம்பாலத்தில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நேரடியாக சென்று பார்த்த போதும் இருவரும் விலகாமல் சில்மிஷம் செய்துவந்தனர். இதனையடுத்து இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது குறைவு என்பதால் காதல் ஜோடிகள் சில்மிஷம் செய்வதற்கும், குடிமகன்கள் கூடாரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ச்சியாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.